ஒப்பிடமுடியாதவை
அன்னை தந்தையிடம் ஒப்பிடமுடியாதவை
கதைகளில் நூறு உண்டு.அவற்றில் எனக்கு தெரிந்த தெரியாத சிறிய உவமையாக இதை நான் பகிர்கிறேன்.
அன்னையர் தினத்தில் தாயாரை பற்றிய பாசமிகு சொற்களும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தையும், பாசத்தையும், மெழுகினை உவமையாக கொண்டு எழுத்து மூலமாக விவரிப்பதும் மிகவும் சிறப்பு.தாயார் மெழுகினை போல் உருகுவதும்,தந்தைக்கு உவமையாக நம்முடைய வளர்ச்சிக்காக கருகும் திரியாகவும், இருப்பது இவர்களின் சிறப்பு.
அதுபோல் தந்தையர் தினத்தில் அவர்களின் பாசமிகு சொற்களும், கண்டிப்புடன் கூடிய அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தையும் , நமக்காகவே அவர் மெழுகில் இருக்கும் திரிபோல் தன்னை தானே கருக்கி கொண்டு நாம் மேலோங்கி வரும் வரை அவரின் கண்டிப்புடன் கூடிய நல்லொழுக்க சிந்தனையும்தான் நமது வளர்ச்சிக்கு காரணம்.இன்று நமது சௌகரியத்திற்க்காக அவர்களது பாதுகாப்பிற்க்காக என்று கூறி பற்பல முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கிறார்கள். ஓன்றை நாம் நினைத்து பார்க்க வேண்டும். நாமும் முதியோர்களாக சிற்சில நாட்களே உள்ளன. ஆகவே நாம் நமக்காக உருகிகருகும் மெழுகுவர்த்தியை ஏற்றும் தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சியாக இல்லாமல். நம்முடைய பெற்றோர்களுக்கு துணையாக இருந்து அவர்களை பேணி காப்பது நமது கடமை.இதனை காலம் தாழ்த்தாமல் அனைத்து நண்பர்களும் ஒருவருக்கொருவர் நமக்காக கிடைத்திருக்கும் பற்பல கம்யூனிகேசன் வாயிலாக தெரியப்படுத்தி கொள்வது
வளர்ச்சிக்கு கிடைத்த பெருமை.
ஆர்தர்
ரமணன்
9842193776
No comments:
Post a Comment